விரைவில் சித்தர்களின் இருப்பிடத்தின் இன்றைய நிலை PAGE UNDER CONSTRUCTION

Saturday 25 December 2010

testing

Friday 29 October 2010

பெருமாள் கோயில்களுக்குச் சென்றால் முதலில் தாயாரை தரிசித்துவிட்டு, அதன்பிறகு பெருமாளை தரிசிக்க வேண்டும் என்பார்கள். பெருமாளிடம் முறையிடுவதை விட, தாயாரிடம் முறையிட்டால் அவள் பெருமாளிடம் நமக்காக பரிந்துரைப்பாள். மனைவியின் சொல் கேட்கும் பெருமாள், விரைவாக வந்து பக்தர்களுக்கு அருளுவார் என்பதன் அடிப்படையில் இவ்வாறு வழிபடுவர். ராமபக்தரான சமர்த்த ராமதாசர், ராமபிரான் மீது உயிரையே வைத்திருந்தார். அவருக்குச் சேவை செய்வதிலேயே தன் வாழ்வைக் கழித்தார். ஒரு சமயம் அவர் அரசனிடம் பெற்ற கடனுக்காக சிறையில் அடைக்கப்பட்டார். ஒவ்வொரு நாளும் மன்னன் அவருக்கு கசையடி கொடுத்தான். ஒவ்வொரு அடிக்கும் அவர், "ராமா! ராமா!' என்றுதான் சொன்னாரே தவிர, வேறு வார்த்தை ஒன்றும் பேசவில்லை. இப்படியாக பதினான்கு ஆண்டுகள் கடந்து விட்டது.
ஒருசமயம் சிறைச்சாலை தொழிலாளிகள் அவரை அடித்தபோது சமர்த்த ராமதாசர்,""சீதாதேவி தாயே! நான் படும் துன்பம் உனது கண்களுக்குத் தெரியவே இல்லையா? என் துன்பத்தை நீக்கும்படி ராமனிடம் சொல்லக்கூடாதா?'' என கதறினார்.
அவரது கதறலைக் கேட்ட சீதா பதறிப்போய் ராமனிடம், ""சுவாமி! நம் பக்தன் இப்படி தினமும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறானே! அவனைக் காத்தருளாமல் இப்படி அமைதியாக இருக்கிறீர்களே!'' என முறையிட்டாள். அதன்பின் ராமர், ஒரு வீரன் வடிவம் எடுத்தார். உடன் லட்சுமணனையும் அழைத்துக்கொண்டு அரண்மனைக்கு சென்றார். மன்னனிடம் ராமதாசர் தர வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு ராமதாசரை மீட்டார். சீதாதேவிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பதன் அடிப்படையில், ராமபிரான் இவ்வாறு செய்ததாகச் சொல்வர். எனவே, பெரு மாளை வணங்கும் முன் தாயாரை வணங்கி விட்டுச் செல்லுங்கள்.

Wednesday 30 January 2008

சித்தர்

இந்து மதத்தின் மகத்துவத்தைப் பற்றி ஸ்ரீ ராமகிருஷ்ணர் கூறும்போது, அதனை சந்தையுடன் ஒப்பிட்டு விளக்குகிறார்.

சந்தை நடக்கும் இடத்திற்கு சற்று தொலைவில் நின்று பார்த்தால், 'ஓ..' என்ற கூச்சல்தான் காதில் கேட்கும். ஆனால், அதனுள்ளேச் சென்று பார்த்தோமானால், சந்தையில் சிலர் பொருட்களை வாங்கிக் கொண்டிருப்பதையும், வியாபாரிகளுடன் பொருட்களை வாங்க வந்தவர்கள் பேசிக்கொண்டிருப்பவர்களையும் காணலாம்.

அதுபோலவே இந்து மதத்தை விட்டு விலகி நின்று பார்த்தால், அது ஒரு குழப்பமாகத்தான் தோன்றும். ஆனால், அந்த மதத்தினுள் சென்று பார்த்தால்தான், அதன் அரிய உண்மைகள் புரியும் என்று அற்புதமாக விளக்குகிறார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

Saturday 15 December 2007

தல வரலாறு:

கலகத்திற்கு பெயர் போன திரிலோக சஞ்சாரி நாரதர், யாருக்கும் கிடைக்காத அரிய மாம்பழத்தை சிவ பெருமானிடம் கொண்டு வந்து கொடுத்தார்.

அந்த பழத்தை பெற விநாயகருக்கும், முருகனுக்கும் கடும் போட்டி. யார் முதலில் உலகை சுற்றி வருகிறார்களோ அவர்களுக்குத்தான் அந்த பழம் என முடிவாகிறது.

இதையடுத்து உலகைச் சுற்றி வர தன் வாகனமான மயில் மீது ஏறி கிளம்பினார் முருகப் பெருமான். விநாயகரோ விவரமானவர். தாய், தந்தையே உலகம் என கூறி சிவனையும், உமையையும் சுற்றி வந்து பழத்தை பெற்றுக் கொண்டார்.

ஏமாற்றப்பட்டதாக கோபம் கொண்ட முருகன், பெற்றவர்களிடம் கோபம் கொண்டு, உடைகளைத் துறந்து, ஒரு முழக் கோவணத்துடன் குன்றின் மீது வந்தமர்ந்தார். முருகன் வந்து அமர்ந்த இடம் தான் பழனி என கூறப்படுகிறது.

முருகனே ஞானப்பழம். மாம்பழம் கிடைக்காமல் அவன் வந்து அமர்ந்த இடம் இது. முருகனைச் சமாதானப்படுத்த முயன்ற பார்வதி, முருகா நீயே ஞானப்பழம் உனக்கெதற்கு பழம். பழத்தின் காரணமாக, பழமான நீ வந்த அமர்ந்த இடம் இனி பழம் நீ என அழைக்கப்படும் என திருவாய் மலர்ந்தருளினார் உமையவள். பழம் நீ என்பதுதான் மருவி பழனி (பழநி) என்றாகி விட்டது.

மேலும் மீது கோபம் கொண்டு நீ குன்றின் அமர்ந்ததால் இனி குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகும் என உமையவள் கூறினாள். இன்றும் குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனை, முருகனை காணலாம்.

பழனி தமிழகத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த பழனி மலை புனிதமான சித்தர்கள் வாழ்ந்த இடம். பழனியில் இருக்கும் தண்டாயுதபாணி சிலை போக சித்தர் என்பவரால் வெகு காலம் முன் நிர்மாணிக்கப்பட்டது. காலம் எது என்பது உறுதியாகத் தெரியவில்லை. பழனி மலை இடும்பன் மலைக்கு அருகே உள்ளது.

பழனி மலை முருகனுக்கு நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு முருகனுக்கு செய்யப்படும் ராஜ அலங்காரத்தை காண கண் கோடி போதாது. அதே போல் முருகன் வெள்ளி ரதத்திலும், தங்க ரதத்திலும், தங்க மயில் வாகனத்திலும் வலம் வரும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும்.

முருகனுக்கு செய்யப்படும் ஒவ்வொரு அபிஷேகமும் கண் கொள்ளாக் காட்சி. இங்கு பிரார்த்தனை செய்து கொண்டு காவடி எடுத்துச் சென்றால் நிறைவேறாத காரியமும் நிறைவேறும் என்பது திண்ணம்.

பழனி மலை முருகன் தரிசனம் கண்ணுக்கு விருந்து. அங்கு கிடைக்கும் பஞ்சாமிர்தம் நாவிற்கு விருந்து. திருப்பதி என்றால் பெருமாளும் லட்டுவும் நினைவுக்கு வரும். அதே போல் பழனியில் திகட்டாத பஞ்சாமிர்தமும், நறுமணம் நிறைந்த விபூதியும் பிரசித்தியானவை.

பஞ்சாமிர்தம் - பஞ்ச என்றால் ஐந்து. அமிர்தம் என்றால் முக்தி தரும் பிரசாதம்.

பழனியில் உண்மையாகவே 5 பழங்களையும், கல்கண்டையும் கலந்து பஞ்சாமிர்தம் செய்யப்படுகிறது. முருகனுக்கு அபிஷேகம் செய்யபட்ட பின் இது விநியோகிகப்படுகிறது. முருகன் அருளும் பிரசாதமான இது முக்தியும் தரும் என பக்தர்கள் பஞ்சாமிர்தம் பெற்று செல்கிறார்கள்.

தூய வெண்நிறத்தில் நறுமணம் கமழும் விபூதி இங்கு கிடைப்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.

சித்தர்


Tuesday 16 October 2007

தீபா திருவிழா
தீபாவளி என்றால் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு தான்! இந்த நாளில் தான் நரகாசுரனை ஸ்ரீகிருஷ்ணன் வதம் செய்தார். நரகாசுரனின் கொடும்பாவியைக் குறிக்கும் விதத்தில் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. நரகாசுரன் ஆண்டதாகச் சொல்லப்படும் பிராக்ஜோதிஷபுரம் தற்போதைய அசாம் மாநிலத்தில் உள்ளது.
பல்வேறு வாழ்வியல் முறைகளை பின்பற்றும் இந்துக்கள் தீபாவளியை அவரவர் வழக்கப்படி கொண்டாடினாலும் தீயவைகளைக் களைந்து நல்லனவற்றை வளர்ப்பதே பொது நோக்கமாக உள்ளது. ஒரு நாள் பண்டிகையாகவும், ஐந்து நாள் பண்டிகையாகவும் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். விஷ்ணு பக்தனும் அசுர மன்னனுமாகிய மகாபலி ஒரு தீபாவளி தினத்தில் முடிசூட்டிக்கொண்டதாக வாமன புராணம் கூறுகிறது. தீபாவளியன்று மாலை வீட்டின் வாசலில் விளக்கு ஏற்றி வைத்தால் யமன் சந்தோஷப்படுவதாக பவிஷ்யோத்திர புராணம் கூறுகிறது. .
தீபாவளியன்று மட்டும் வெந்நீரில் கங்கையும், எண்ணெயில் திருமகளும் குடிகொண்டிருப்பார்கள் என்பது ஒரு ஐதீகம். பகவான் விஷ்ணுவுக்கும் லஷ்மி தேவிக்கும் திருமணம் நடந்ததைக் கொண்டாடுவதே இந்த விழா என்று சிலர் கூறுகிறார்கள்.
தென்னிந்தியாவில் நரகாசுர வதம் என்று கொண்டாடுவது போல, உத்திரபிரதேசத்தில் ராவண வதம் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் தீபாவளியன்று தான் வியாபாரிகள் புதுக்கணக்கு தொடங்குவர். மத்திய பிரதேசத்தில், மகாலட்சுமியின் கணவரான மகாவிஷ்ணு பூலோகத்திற்கு வந்த நன்னாளாக தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.
வங்காளத்தில் இந்த விழா காளிமாதாவை வழிபடும் விழாவாக விளங்குகிறது. ராவணனை வென்று ஸ்ரீராமர் அயோத்திக்கு திரும்பிய நன்னாளாகவும் இந்தப் புனித தினம் கருதப்படுகிறது.தீபாவளியன்று ஒரு துடைப்பத்தைக் கொளுத்தி வீட்டுக்கு வெளியே போட்டால் மூதேவி ஓடிவிடும் என்பது பீகார் மாநில மக்களுக்கு ஒரு நம்பிக்கை.
சில வடமாநிலங்களில் பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவதற்காக கேதார கௌரி விரதத்தை தீபாவளி சமயத்தில் கொண்டாடுகிறார்கள்.
ஆதிசங்கரர் அத்வைதத்தைப் பரப்புவதற்கான ஞானபீடங்களை ஒரு தீபாவளியன்று தான் ஸ்தாபித்தார். தீபாவளி மாதமான ஐப்பசிக்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு. இந்த மாதத்தில் மட்டும், இரவும் பகலும் சம அளவில், தராசின் இரு தட்டுகளைப் போல் சம நிலையில் நிகழ்வது தான் இந்த பெயர் உருவானதுக்கு காரணம்.
எனவே, இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த தீபாவளிப் பண்டிகையை கொண்டாடி மகிழ்வோமாக!

Saturday 15 September 2007

பிரதோஷத்தின் போது வழிபாடு செய்தால் வறுமை,பயம், பாவம், மரணவேதனை இவைகள் எல்லாம் விலகும். நன்மைகள் பலவிளையும். இது கடம்பவன புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
பிரதோஷ நேரம் மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை உள்ள காலம். வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது.
சனிக்கிழமை பிரதோஷம் வந்தால் மிகச் சிறப்பு. சனிப்பிரதோஷ நேரத்தில் சிவாலய வழிபாடு செய்தால் ஐந்து ஆண்டுகள் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்குமாம்.
பிரதோஷ நேரத்தில் ரிஷப தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும் சிவப்பு அரிசி, நெய்விளக்கு வைத்தும் வழிபட்டால் நலம்.
பிரதோஷத்தன்று ரிஷபதேவரின் இரண்டு கொம்புகளுக்கிடையே சிவலிங்கத்தை கண்டு வணஙகினால் நன்மை பயக்கும்.